
நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி சென்ற படகு திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் படகு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 76 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் விரைந்துள்ளனர்.அந்நாட்டு அதிபர் முகமது புகாரி இந்த துயரசம்பவதிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.