படக்குழுவினரை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அஜித் அறிவுறுத்தல்..!!

ஒவ்வொருவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி படக்குழுவினரை அக்கறையுடன் அறிவுறுத்தியுள்ளார் நடிகர் அஜித்குமார்.

ஆர்ட் டைரக்டர் மிலன் திடீர் மரணம் காரணமாக, விடாமுயற்சி படக்குழுவினருக்கு அஜித்குமார் மனிதநேய முறையில் அட்வைஸ் செய்துள்ளார். அஜித் படங்களில் தொடர்ந்து ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர் மிலன்.

அஜித், திரிஷா, ரெஜினா நடிக்கும் விடாமுயற்சி படத்துக்கும் இவர்தான் ஆர்ட் டைரக்டராக தேர்வானார். படக்குழுவினருடன் மிலன் அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு அஜர்பைஜானிலேயே மிலன் காலமானார்.

இது அஜித் உள்பட படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் நடந்து முடிந்தது.இந்நிலையில் அஜர்பைஜானில் இருக்கும் அஜித், படக்குழுவினர் மத்தியில் பேசியிருக்கிறார்.

அப்போது, மிலன் மறைவு தன்னை மிகவும் பாதித்ததாகவும் எனவே ஒவ்வொருவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளார். படக்குழுவினர் மீது அக்கறையுடன் அஜித் சொன்ன இந்த அறிவுரையால் டெக்னீஷியன்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Previous

ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?..

Read Next

கோதுமையில் ருசி மிகுந்த வித்தியாசமான பாயசம் செய்முறை விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular