
பல்வேறு வகையான சரும பிரச்சனைகளுக்கு பூவரசன் மூலம் தீர்வு காண முடியும் என கூறப்படுகிறது இதற்கான வழிமுறைகள் குறித்து காணலாம்…
பெரும்பாலும் சரும நோய்கள் ஏற்படாமல் எல்லோருமே கவனமாக இருப்பார்கள். அதையும் மீறி சிலருக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட்டு விடும் அப்படி சரும பிரச்சனைகளுக்கு பூவரசன் மூலம் தீர்வு காணலாம் என கூறப்படுகிறது. பூவரசன் மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய காயை மஞ்சள் உரசுவது போல் உரசினால் அல்லது இடித்து அரைத்தாலோ அதிலிருந்து ஒரு திரவம் உருவாகும் இந்த திரவத்தை தேமல் இருக்கும் இடத்தில் நாம் தினமும் தடவினால் தேமல் முற்றிலும் நீங்கும் என கூறப்படுகிறது. சொரி சிரங்கு கருந்தேம்பல் படர்தாமரை என பல சரும பிரச்சனைகளுக்கு இந்த முறை பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது தினமும் தொடர்ச்சியாக 30 நிமிடம் நிமிடங்கள் தடவி அப்படியே விட்டு பிறகு முகத்தை கழுவிக்கொள்ளலாம் சிலருக்கு செயின் போட்டு கழுத்தில் கருமை ஏற்பட்டிருக்கும் இந்த கருமையை நீக்குவதற்கு இந்த திரவம் உதவுகிறது இதை நம் தொடர்ச்சியாக தடவதன் மூலம் அந்த கருமை நீங்கி நம்முடைய இயற்கையான சரும நிறம் வெளிப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..!!