படித்ததில் பிடித்தது: அழகான அண்ணன் தம்பி உறவு..!!

ஒன்றாய் பிறந்த உறவுகள் நாங்கள்
இரண்டாய் பிறந்தும் ஒரே எண்ணங்கள்
பாசம் பகிரும் பிறப்புகள் நாங்கள்
நேசம் மறக்கா அண்ணன் தம்பிகள் ……….

ஒன்றாய் குடித்த தாயின் பாலும்
சுகமாய் பகிர்ந்த தாயின் மடியும்
அன்போடு கிடைத்த நேச வளர்ப்பும்
சமமாய் கிடைத்த தாயின் அன்பும் ……….

ஒன்றாய் இருந்த ஓட்டு வீடும்
படுத்து உறங்கிய கிழிந்த பாயும்
ஒன்றாய் பகிர்ந்த ஒற்றை தலைகாணியும்
பாசமாய் கிடைத்த கஞ்சியும் கூழும் …….

சேர்ந்து விளையாடிய சிறுவயது விளையாட்டும்
ஒன்றாய் குளித்த வெந்நீர் குளியலும்
மாற்றி உடுத்திய கிழிந்த உடைகளும்
மாறி மாறி சண்டைகள் இட்டதும் ………..

ஒன்றாய் சேர்ந்து பள்ளிக்கு சென்றதும்
ஒன்றாய் கடையில் வாங்கி தின்றதும்
ஒருவருக்கு பரிந்து எதிரியை அடித்ததும்
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்ததும் ………..

எனதென்றும் அவனது என்றும் ஏதுமில்லை
ஒன்றாய் பயணிக்கும் வாழ்க்கை இதிலே
போட்டிகள் பொறாமைகள் என்றும் இல்லை
பொய்யாய் போற்றும் அன்பும் இல்லை ………

ஒருவரை ஒருவர் மறுப்பதுமில்லை
ஒருவரை ஒருவர் மறந்ததுமில்லை
துரோகங்கள் இல்லா எங்கள் வாழ்க்கை
துயரம் இல்லா இன்ப வாழ்க்கை ……..

காலம் மாறும் கடமைகள் மாறும்
வேகமாய் போகும் உலகம் இதிலே
இனிந்தே பயணிக்கும் அண்ணன் தம்பிகள்
நாம் என்றுமிருப்போம் ஒற்றுமை உணர்வில்…

Read Previous

இளம்பெண் தற்கொலை சம்பவம்..!! தந்தை போலீசில் பரபரப்பு புகார்..!!

Read Next

இந்த 3 பொருள் போதும்..!! ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular