படித்ததில் பிடித்தது: இப்படி ஒரு கணவன் கிடைத்தால் இழந்து விடாதீர்கள் பெண்களே..!!

இப்படி ஒரு கணவன் கிடைத்தால் அவரை நிச்சயம் இழந்து விடாதீர்கள்!

1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார்.உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது.

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8) உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

Read Previous

படித்ததில் பிடித்தது: வெகுளி மனைவி.. குறும்புக்கார கணவன்.. ஒரு அழகான தம்பதியினரின் கதை..!!

Read Next

கல்யாணமான ஆண்களே ஒருபோதும் இந்த பதிவை படிக்க மறந்துடாதீங்க..!! இது உங்களுக்கான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular