படித்ததில் பிடித்தது: இறுதிவரை காதல் அடம் பிடிக்கும்..!!

எனக்கு உன்னைப் பிடிக்கும்

சிறை பிடிக்கும் இமை பிடிக்கும்

சிருங்கார குரல் பிடிக்கும்

குழிவிழும் குளம் பிடிக்கும்

குளத்தின் மேலிரு மீன்கள் பிடிக்கும்

மீனாய் என்னை பிடிக்கும்

முகத்தூண்டில் பிடிக்கும்

மீனாய் நான் மாறிட பிடிக்கும்..

 

தெருவோர கடைகளில்

உன் பெயர் பிடிக்கும்

தெருவிற்கும் உன்பெயர் வைக்க

மனம் அடம் பிடிக்கும்..

 

சாலையில் கைகோர்த்து

நடந்திட பிடிக்கும்

நடக்கையில் தூக்கிச்

சுமந்திட பிடிக்கும்

தரைமீது கால் படாது

தாங்கிட பிடிக்கும்

தூங்கிட தலைகோதி

தாலாட்ட பிடிக்கும்..

 

சிரிக்கும் சிரிப்பை சேமிக்க பிடிக்கும்

உதிர்த்த வார்த்தைகளை

உச்சரிக்க பிடிக்கும்

காலவரையின்றியே

பேசிட பிடிக்கும்

காரமாய் சிவந்த

கன்னச்சிவப்புகள் பிடிக்கும்…

 

உறங்காமலே உன்னோடு

பேசிட பிடிக்கும்

உறக்கத்தை கெடுக்கும்

உளறல்கள் பிடிக்கும்

கனவோடு நீ வந்தால்

கனவுகள் பிடிக்கும்

கனவு கலைந்ததும்

கண்ணெதிரே காணப் பிடிக்கும்

 

இருதயத்தை துளைக்கும்

இமைதூரிகை பிடிக்கும்

இதழ் சுழித்து நீ செய்யும்

இம்சைகள் பிடிக்கும்..

 

இருப்புக்கவி தந்த

இருவரி பிடிக்கும்

இருவரிக்குள் அடங்கா

இருமரிச்சம் பிடிக்கும்..

 

சேதிகள் சொல்லும்

தேதிகள் பிடிக்கும்

சேலைத்தலைப்பில்

சேர்ந்திட பிடிக்கும்..

 

சேர்ந்திடும் நேரத்தில்

சேவைகள் பிடிக்கும்

சேராமல் போனால்

சாகவே பிடிக்கும்…

 

காதல் அடம் பிடிக்கும்.

 

Read Previous

தன் வினை தன்னைச்சுடும்..!! மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்..!!

Read Next

கணவன் மனைவி உறவை பற்றிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular