படித்ததில் பிடித்தது: திருமணத்திற்கு தயாராகும் மகனுக்கு தந்தையின் அறிவுரை..!!

திருமணத்திற்கு தயாராகும் மகனுக்கு தந்தையின் அறிவுரை…

 

மகனே, நான் உனக்கு மிகவும் நேர்மையான, உண்மையான ஒரு விஷயத்தை சொல்கிறேன்.

 

ஒரு பெண்ணின் உயரம், அழகு பற்றி கவலைப்படாதே. ஆனால் அவளுடைய இதயம் மற்றும் மூளையின் அளவைப் பற்றி யோசி. அவளுடைய அன்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அளவைப் பற்றி கவலைப்படு. ஏனெனில் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடன் உன் வாழ்க்கை அழகு மற்றும் மார்பக அளவு பற்றியதாக இருக்காது.

 

உன் அம்மாவும் நானும் இன்னும் மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்கிறோம், நான் இன்னும் அவளை நேசிக்கிறேன், அவள் இன்னும் என்னை நேசிக்கிறாள். அதற்கு காரணம் நான் சொன்னதுதான்.

 

பணத்தை விரும்பும் பெண்ணிடம் கவனமாக இரு. அதாவது, ‘ஒவ்வொரு முறையும்’ தன் தலைமுடி, துணிகள், காலணிகள், பைகள் உள்ளாடைகள் மற்றும் மேக்கப் பற்றியே பேசும் பெண் ஆடம்பர விரும்பியாக இருப்பாள்.

 

திருமணம் என்பது இந்த விஷயங்களைப் பற்றியது அல்ல. மேக்கப், துணி, காலணிகள் மற்றும் உள்ளாடைகள் இல்லாமல் ஒரு நல்ல திருமணம் நிலைத்து நிற்கும். ஆனால் காதல் இல்லாமல், அன்பு இல்லமால், அக்கறை இல்லாமல் எந்த திருமணமும் நீண்ட நாள் நிலைக்காது.

 

உங்கள் அம்மாவை நான் திருமணம் செய்துகொண்டபோது, எனக்கு சொந்தமாக கார் அல்லது வீடு இல்லை. நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால் எனக்கு கனவுகள் இருந்தன, அவள் பாராட்டினாள்,

என் கனவுகளை ஆதரித்தாள். உனது கனவை ஆதரிக்காத எந்தவொரு பெண்ணும் ஒரு நிமிடம் கூட உன்னுடன் வாழ தகுதியற்றவர்.

 

உன்னை விட உன்னுடைய கனவுகளை மதிக்கும் பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் நீ ஒருவரைக் கண்டால் நீ அதிர்ஷ்டசாலி, மகனே, நீ தவிர்க்க வேண்டிய ஒரு பெண் வகை இங்கு இருக்கிறது,

அவசரப்பட்டு இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை முழுவதும் வருத்தப்படுவாய்.

 

மோசமான பெண்களில் ஒருவரை நீ திருமணம் செய்தால், எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பார். இதை வாங்கினால் அதான் வாங்கியிருக்க வேண்டும் என்பாள், இதை செய்தால், இப்படி செய்திருக்க வேண்டும் என்பாள். தயவுசெய்து விலகி இரு!

 

பெரும்பாலான பெண்கள் பேசுவதை ரசிக்கிறார்கள், ஆனால் இரண்டு மணி நேரம் பேசியதை இரண்டு நிமிடம் கேட்பவரே இங்கு அதிகம். புத்திசாலித்தனமாக இருங்கள், பாசாங்கு செய்யும் வாழ்க்கை துணையிடம் உனக்கான நல்வார்த்தைகள் கிடைக்காது. கண்களை மூடி இதயத்தைத் திறந்து வாழ்க்கை துணையை தேடு.

மனதால் தேடாதே. அறிவால் தேடு.

 

எல்லா பெண்ணும் உனக்கானவள் அல்ல. உன் கனவில் நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை நீ கண்டால், தன்னை சுற்றியிருக்கும் சக மனிதர்களை மதிக்கும் ஒரு பெண்ணை கண்டால் அவளை விட்டுவிடாதே. ஆனால் நினைவில் கொள், நீ ஒரு தரம் கெட்ட மனிதனாக என்றுமே இருக்க கூடாது.

 

நீ ஒரு நல்ல பெண்ணைக் கண்டால், நீ ஒரு கெட்ட ஆணாக இருந்தால்,

உனக்கு நல்ல திருமணம் நடக்காது! நல்ல துணை அமையாது!

 

ஒரு பெண்ணின் மீது சலித்து போகும் அளவிற்கு கோபமும், பாசமும், காமமும் காட்டி, எல்லாம் முடிந்த பின்பும், அவள் மீது உனக்கிருக்கும் ஈர்ப்பு குறையாமல் இருந்தால்…அதுவே காதல்.

 

அப்படி ஒரு காதலுடன் வாழ, உன்னைக் குறைத்து மதிப்பிடாத, உனக்கு துணை நிற்கும் ஒரு பெண்ணை கண்டுபிடித்து கொண்டு வா…

Read Previous

டெங்குவை விரட்டும் மூலிகை மருத்துவம்..!!

Read Next

பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular