
உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதோவொரு தேவைக்காக எனக்கு நீயும், உனக்கு நானும் தேவைப்படுகிறோம் அல்லவா கண்மணி! அதற்கு நாம் காதலென்ற பெயர் வைத்திருக்கிறோம்.
சின்னக் குழந்தை மாதிரி பண்ணாத,
லூசு மாதிரி இருக்கு, கொஞ்சம் மெச்சூரா இரு, அப்படி இரு, இப்படி இரு, அடிக்கடி சண்டையிட்டு கொள்கிறோம். ஆசையாசையாய் பார்த்துக் கொண்ட முகங்களை எதார்த்தமாய் பார்த்துக் கொள்கிறோம். நமக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ அதெல்லாம் இரண்டாம் பட்சம் தேவையெழும் போதெல்லாம் புணர்விற்கு ஒப்புக் கொள், தூசுபடிந்த புத்தகமாய் நம் உணர்வுகள், இப்படி தான் இருக்க வேண்டுமென என் விருப்பத்தை உன் மேலும், உன் விருப்பத்தை என்மேலும் திணித்துக் கொள்கிறோம். இன்னும் இதை காதலென்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
கழுத்தின் கீழே இறங்காத பார்வைகள், காமம் தொடாத பேச்சுக்கள், முத்தத்திற்கே பல கனாக்கள், ஒரு தீண்டலுக்கே புல்லரித்த தேகங்கள், ஆசை வார்த்தைகளுக்கு ஆகாயம் பறந்த மனம், சிறுசிறு அசைவுகளையும்
கவிதைகளாய் ரசித்த நாட்கள், துளியும் சுயநலமற்ற பேரன்பில்
உனக்காக நானும், எனக்காக நீயும்
வாழ்ந்திருந்தோம் தெரியுமா?
அதற்கும் காதலென்றே தான் பெயர் வைத்திருந்தோம்.
ஆரம்பத்தில் காதல் நம் கைகளை பற்றிக் கொண்டிருந்தது. இப்போது நம் கைகள் அந்த காதலை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. ❣