படித்ததில் பிடித்தது: பெண்களின் மொழிகள்..!! வாழ்க்கை இனிமையாக மாறும்..!!

பெண்களின் மொழிகள்♥

 

♥ஒரு பெண் #மௌனமாக இருக்கிறாள் என்றால்…

அவள் எண்ண அலைகளில் பல ஆயிரம் விஷயங்கள் நிழலாடிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்…!

 

♥நீ வம்பிழுக்கும்போது, அவள் வாதாடவில்லை எனில்…

அவள் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள் என்று பொருள்…!

 

♥ஒரு பெண் பல கேள்விக்குறியோடு உன்னை பார்க்கிறாள் என்றால்…

நீ எதுவரை அவளுடன் நீடித்து இருப்பாய் என்று சிந்திக்கிறாள் என்று பொருள்…!

 

♥நீ நலமா என்று கேட்கும்போது, ஒரு பெண் சில வினாடிகள் கழித்து “நான் நலமாய் இருக்கிறேன்” என்று பதிலளித்தாளானால்…

அவள் நலமாக இல்லை என்று பொருள்…!

 

♥ஒரு பெண், நீ பேசும்போது கண் இமைக்காமல் உற்றுப்பார்த்துக் கொண்டிருகிறாளானால்…

நீ ஏன் அவளிடம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறாய் என்று வியக்கிறாள் என பொருள்…!

 

♥ஒரு பெண் உன் தோளில் சாய விரும்புகிறாளானால்..

நீ காலம் முழுதும் அவளுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறாள் என்று பொருள்…!

 

♥ஒரு பெண் உன்னை தினம் தினம் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறாளானால்…

அவள் உன்னிடம் மிக நெருக்கமாக, அன்பாக இருக்க விரும்புகிறாள் என்று பொருள்…!

 

♥ஒரு பெண் உன்னிடம் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறுகிறாளானால்…

அதன் அர்த்தமறிந்தே அந்த வார்த்தையை உச்சரித்திருக்கிறாள் என்று பொருள்…!

 

♥ஒரு பெண் “நான் உங்கள் பிரிவால் துயருறுகிறேன் ” I MISS YOU” என்று கூறுகிறாளானால்…

அவள் அளவிற்கு வேறு எவரும் உங்கள் பிரிவால் வாடவில்லை என்று பொருள்…!

 

#வாழ்க்கை ஒரு முறை தான்…

 

♥இந்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தமான சரியான உறவுடன் இணைத்துக்கொள்ளுங்கள்…

 

♥உங்கள் மனம் அறிந்து, அன்பை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு உறவை தேர்ந்தெடுங்கள்…

 

♥உண்மையான அன்புடன் உங்கள் உள்ள அழகை ரசிக்கும் ஒரு துணையை தேர்ந்தெடுங்கள்…

 

♥தன் தூக்கத்தை மறந்து உங்கள் தூக்கத்தை ரசிக்கும் ஒரு அன்பான துணையை தேர்ந்தெடுங்கள்…

 

♥நீங்கள் அன்போடு பார்க்கும்போது, தோள் சாய இடம் கொடுக்கும் ஒரு உறவை தேடுங்கள்…

 

♥உங்களை அடைய தவம் செய்திருக்க வேண்டும் என்று உணரும் ஒரு உறவை மணமுடியுங்கள்…

 

♥வாழ்க்கை நிச்சயம் இனிமையாக இருக்கும்…!

Read Previous

44 வயதில் போராடி பெற்ற குழந்தை..!! தாயுடன் இறந்த சோகம்..!!

Read Next

காதல் எப்போது எப்படி யார் மேல் வரும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular