படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு முகாம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10. 30 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ. டி. ஐ. , டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www. tnprivatejobs. tn. gov. in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read Previous

ரேஷன் அரிசியை கடத்தி சென்றது – அவரிடமிருந்து 150 கிலோ ரேஷன் அரிசி, மொபட்டை பறிமுதல்..!!

Read Next

நூலகத்திற்கு தினமும் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி மனு அளிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular