படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை – கட்டாயம் வாசியுங்கள்..!!

படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை – கட்டாயம் வாசியுங்கள்…!!!

ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு…!!!

ரொம்ப தூரத்தில் இருந்து பறந்துவந்த
குருவி ஒண்ணு முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு
பொரிச்சிக்கிட்டுமான்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு…!!!

ஆனா அந்த மரம் அதெல்லாம் முடியாதுனு கண்டிஷனா சொல்லிருச்சு…!!!

சரின்னு அடுத்த இரண்டாவது மரத்துக்கிட்டே போய் அந்தக்குருவி கேட்டுச்சு…!!!

இடம்தானே தாராளமா இருந்துக்கோனு பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்…!!!

ஒரே மாசம்தான் ஆத்துல வெள்ளம்
பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது…!!!

ஆனால் குருவிக்கு இடம் கொடுத்த இரண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது…!!!

முதல் ஆலமரத்தைப் பார்த்த குருவி அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது…!!!

ஆனால் வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா…!!!

என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும் நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்…!!!

ஏய் குருவியே நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும் என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது…!!!

இப்படி தான் உண்மையான தியாகிகள் வெளி உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை…!!!

நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு…!!!

நம் மகிழ்ச்சிக்காக தம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு…!!!

மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும்…!!!

மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்
சீர் செய்யும் பெற்றோர்களும்
சகோதரர்களும் கூட தியாகிகள்தான்…!!!

சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத் தோன்றினாலும்
அது நம் நன்மைக்காகவே இருக்கும்
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது…!!!

#படித்ததில்_பிடித்தது

Read Previous

தனது பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்..!!

Read Next

பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM கார்டாக இருக்கலாம்..!! ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular