“படுகொலை மாடல் அரசு” ரவுடிகளின் ராஜ்யமாகிறது சென்னை..!! ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தலைவர்கள் கண்டனம்..!!

பகுஜான் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  நேற்று அவரது வீட்டில் 7.30  மணி அளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தமிழக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இது திராவிட மாடல் அரசு இல்லை இந்த அரசு படுகொலை அரசு கடுமையாய் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவரின் எக்ஸ் தள பக்கத்தில் “பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பதவி வைத்து வந்த ஆம்ஸ்ட்ராங்  படுகொலை சென்னை நகரம் கொலை நகரம் என அழைக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சட்ட ஒழுங்கு  சீர்கேட்டின் உச்சத்தில் தமிழகம் தொடர் படுகொலை நகரம் ஆக மாறி வருகிறது.அமைதி காக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும் திராவிட மாடல் அரசு இல்ல இது அரசு படுகொலை மாடல் அரசு”, என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அதேபோல் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் “பகுஜான் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது .ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு வந்தவர் இவர். இன்று தனது வீட்டில் அருகிலேயே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட பகையானாலும். அரசியல் காழ்ப்புணர்வாலும் இது போன்ற வன்முறைகள் தீர்வை தராது. இப்படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றோம். கொலையில் ஈடுபட்டுள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவரது கட்சிகும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என தெரிவித்துள்ளார்.

Read Previous

பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற அரசு உறுதி..!! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

Read Next

விமான நிலையத்தில் திடீரென கசிந்த விஷவாயு..!!அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஊழியர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular