சென்னையில், பாலியல் தொழில் நடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்த நிலையில், இளம்பெண்களை மீட்டனர். நெற்குன்றத்தில் ராஜா (55) என்ற பாலியல் புரோக்கர், 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் குழு மூலம் இந்த தொழில் நடந்து வந்துள்ளது. இதனையறிந்த போலிசார், ராஜாவை கைது செய்தனர். பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.




