பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் இன்றியமையாதது. இரவில் சரியாக தூங்காவிட்டால் மறுநாள் செய்யும் வேலைகளில் முழுமையாக கவனம் வெலுத்த முடியாத நிலை ஏற்படும்.
தூக்கம் இன்மை பிரச்சினை உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
சிறந்த தூக்கம் ஆராக்கியத்துக்கு இன்றியமையாதது. இரவில் நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு மனஅழுத்தம் மற்றும் மிகை சிந்தனை காரணமாகவும் சிலருக்கு கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவில் சரியான தூக்கம் வருவதில்லை.
படுக்கையில் படுத்ததும் சில நிமிடங்களில் தூங்குவதெல்லாம் வரம் என்றும் சொல்லுமளவிற்கு தூக்கமின்மை பிரச்சனை உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நல்ல தூக்கம் அவசியம். ஆனால் நம்முடைய வாழ்க்கைமுறையால் பலரும் போதுமான தூக்கம் இல்லாமல் தவிக்கிறோம். தூக்கமின்மை பிரச்சினைக்கு முடிவுக்கட்டும் சில விடங்கன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தூக்கத்தை வரவழைக்க சிறந்த வழிகள் :
முக்கியமாக மூளையை சாந்தப்படுத்தும் சில நடவடிக்கைகளில் ஈடுப்படுவதன் மூலம் எளிமையாக தூக்கத்தை வரவைக்க முடியும்.
தினமும் நேரத்துக்கு தூங்க வேண்டும் என்றால் ஒரே நேரத்திற்கு படுக்கைக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
இரவில் பல் துலக்குவது, சரும பராமரிப்பு, தூங்குவதற்கு உண்டான வெப்பநிலையை ஏற்படுத்துவது படுக்கையை தயார் படுத்துவது போன்ற விடயங்களும் சிறந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.
இதனை தொடர்ந்து செய்யும் போது தூங்கும் நேரம் வந்துவிட்டது என மூளை தானாக அந்த வழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்துவிடும்.
கால் பாதத்தில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி தலை வரை உடல் பாகங்கனை தளர்வாக்குவதன் மூலமும் விரைவில் தூக்கத்தை வரவழைக்க முடியும்.
மன அழுத்தம் மற்றும் மிகைச்சிந்தனையால் தூக்கமின்றி தவிப்பவர்கள் கட்டிலில் படுத்தபடி உங்கள் நாக்கை தளர்வாக்கி வாயின் அடிப்பகுதியை தொட வேண்டும்.
பின்னர் மெதுவாக மூக்கின் வழியாக சில நொடிகள் மூச்சை உள்ளிழுத்து பின்னர் ஏழு நொடிகளுக்கு மூச்சை கட்டுப்படுத்தி பின்னர், அடுத்த எட்டு நொடிகளுக்கு மெதுவாக மூச்சை வெளிவிடும் பயிற்சியை செய்து வந்தால் விரைவாக ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றுவிடலாம்.
இரவு தூங்குவதற்கு முன்பு டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மனதில் எழும் தேவையற்ற சிந்தனைகளுக்கு தீர்வு கிடைக்கும் இதனால் மனம் சாந்தமடைகின்றது. இது சிறந்த மற்றும் ஆரோக்கியமான தூக்கத்துக்கு துணைப்புரியும்.
தூக்கத்தை வரவழைக்க மெலடோனின் எனும் ஹார்மோன் முக்கியமானது. ஆனால் செல்போன் திரைகளில் இருந்த வெளிவரும் நீலகதிர்கள் மெலடோனின் உற்பத்தியை குறைத்துவிடுகின்றது. இதனால் சரியாக தூங்க முடியதாத நிலை உருவாகின்றது.
ஆகையால் உங்கள் படுக்கையறைக்கு மொபைலை எடுத்துச் செல்லாமல் இருப்பது சிறந்த தூக்கத்துக்கு பெரிடுதும் துணைப்புரியும்.
மேலும் இரவில் சாப்பிடும் உணவு இலகுவில சமிப்பாடடைய கூடியதாக இருக்க வேண்டும். இதுவும் தூக்கத்தை வரவழைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.