இன்றைய காலகட்டங்களில் எல்லோரும் பொதுவாக தூங்கும் நேரம் நடு இரவு ஆகிவிடுகிறது, இந்த நிலையில் இன்றைய தலைமுறைகள் தூங்குவது என்பது அரிதற்ற ஒன்றாக இருக்கிறது 24 மணி நேரம் கணினி மற்றும் அலைபேசியை தன் கண் முன் வைத்துக்கொண்டு தான் இன்றைய தலைமுறைகள் வாழ்கிறார்கள் இப்படி இருக்கையில் நீங்கள் படுத்ததுமே ஆரோக்கியமான உறக்கம் வேண்டுமா இதை கடைபிடியுங்கள் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.
மன அழுத்தம், கவலை மற்றும் பதட்டம் எண்ணற்ற சிந்தனைகள் இவை கண்களுக்கு ஓய்வில்லாமல் செய்யும் இதனால் உடல் நலம் பாதிக்கும் எனவே தினமும் தூங்குவதற்கு சரியான ஒரு நேரத்தை உங்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அதேபோல் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டீவி, மொபைல் போன் மற்றும் வெளிச்சம் தரக்கூடிய பொருட்களை தவிர்த்து விடுங்கள், மேலும் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுங்கள் செரிக்க கூடிய உணவை தேர்ந்தெடுத்துக் கொண்டு சாப்பிடும் போது இரவில் சீக்கிரம் செரிப்பதும் மற்றும் உடலில் எந்த உபாதைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக தூங்கலாம் என்றும் உளவியல் கூறுகிறது, தண்ணீரில் சீரகம் மற்றும் தேன் கலந்து குடிப்பதனால் இரவில் ஆரோக்கியமான தூக்கம் வருகிறது என்று மருத்துவ ஆராய்ச்சி மையம் கூறுகிறது..!!