பட்ஜெட் 2024: 40000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றம்..!!

40,000 ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் மூன்று புதிய ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்க உள்ளன. உதான் திட்டத்தில் 550 தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் விமான நிலையங்கள் 149ஆக அதிகரிக்கப்படும். நாட்டில் புதிய விமான நிலையங்கள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

Read Previous

பட்ஜெட் 2024: 300 யூனிட் வரை இலவச மின்சாரம்..!!

Read Next

தமிழக போக்குவரத்தில் புதிய மாற்றம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular