பட்டப்பகலில் காதலி கண்முன்னே துள்ளத்துடிக்க இளைஞருக்கு கொடூரம்..!! சென்னையில் பயங்கரம்..!!

தாம்பரம் பகுதியில் தனது பெண் தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் நடுரோட்டில் துள்ளத் துடிக்க வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் கிழக்கு திருவள்ளூர் நகரை சார்ந்த கனகராஜ் என்பவருக்கு உதயகுமார் என்கின்ற 22 வயதுடைய மகன் இருந்துள்ளார். இவர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு எம்பிஏ பயிற்று வருகிறார், சிட்லபாக்கம் சேது நாராயணன் சாலை வழியே தன்னுடைய பெண் தோழியுடன் உதயகுமார் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அதே வழியில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர்களை வழிமறித்து அந்தப் பெண்ணின் கண் முன் உதயகுமாரை சரமாரியாய் வெட்டியுள்ளனர். அப்போது உயிருக்கு பயந்து உதயகுமார் தப்பி ஓடிய நிலையில் அந்த கும்பல் அவரை விடாமல் தொடர்ந்து விரட்டி விரட்டி வெட்டிவிட்டு அங்கிருந்து ப்பி ஓடினர்.

இதை பார்த்த பெண் தோழி பயந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். நடுரோட்டில் வாலிபர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர், இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், பின் மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார், உதயகுமாரை வெட்டிய அந்த மூன்று பேரும் தானாகவே சேலையூர் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தனர்.

இது சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை என்பதால் சேலையூர் காவல்துறையினர் கொலையாளிகள் 3 பேரையும் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர், இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த உதயகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்தார். கல்லூரி மாணவன் கிருஷ்ணா (வயது 19), சாந்தகுமார் (வயது 19), எலக்ட்ரீசியன் நரேஷ் (வயது 24) ஆகிய கொலையாளிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்ததில் நான்கு மாதங்களுக்கு முன்பாக கண்ணப்பர் தெருவில் ஆட்டோ நிறுத்துவதில் நரேசுக்கும் உதயகுமாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது உதயகுமார் நரேஷை ஆபாசமாக பேசி மிரட்டி உள்ளார், இதனால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உதயகுமாரை கொள்வதற்காக தக்க சமயத்தை எதிர்பார்த்து நரேஷ்  காத்துக் கொண்டு இருந்துள்ளார், எனவே தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து உதயகுமாரை அவர் குத்தி கொலை செய்ததாக அவரை வாக்கு மூலம் அளித்துள்ளார். பட்டப் பகலில் நடு  ரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

Read Previous

“கோவையில் சிறையில் என்னை கொல்லப்போறாங்க..!!” – செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் அதிர்ச்சி தகவல்..!!

Read Next

2030-க்குள் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,00,000/-: காரணம் என்ன..? விபரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular