பட்டப் பகலிலே குளத்தின் அருகில் குடத்தில் வைத்து கள்ள சாராயம் விற்பனை..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே போதைப்பொருள்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக கள்ளச்சாராயம் போன்றவை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் சங்கராபுரம் பகுதியில் குடத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் பகுதியில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்த விலையில் கள்ளச்சாராயம் கிடைக்கிறது என்று பல்வேறு குடிமகன்கள் அதை வாங்கி அருந்தி உள்ளனர்.

இதனால் அவர்களுக்கு வாந்தி, தலைவலி, மயக்கம் ஆகியவை ஏற்பட்டது. இதனால் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன், சுரேஷ், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவரை கைது செய்ய வேண்டும் எனவும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும்  காவல்துறையிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஒரே பகுதியில் உள்ள ஒரே தெருவை சார்ந்த ஐந்து பேர் கலாச்சாராயம் குடித்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் குளத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

https://www.facebook.com/watch/?v=1502668477269231

Read Previous

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்..!! காவல்துறையின் உயர்மட்ட அளவில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும்..!! டிஜிபி சங்கர் ஜீவால்..!!

Read Next

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்..!! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular