
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!! மீட்பு பணிகள் தீவிரம்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் தத்தாபுகூர் பகுதியில் சட்ட விரோதமாக இருந்த பட்டாசு ஆலையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடியிருப்பு நிறைந்த பகுதியில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததால் பல வீடுகள் தரை மட்டம் ஆகி உள்ளன. அதில் பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்பட வில்லை என தெரிவித்து உள்ளனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.