பட்டாசு விபத்து – ஓபிஎஸ் இரங்கல்..!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 3 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

யாசகம் கேட்கவில்லை, நீரை கேட்கிறோம்..!!

Read Next

அரியலூர் பட்டாசு விபத்து – பலி 10ஆக உயர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular