
இந்தியாவில் பட்டினியில் வாழும் மக்கள் அதிகம் என்று உலகளாவிய பட்டினி குறியீட்டில் தெரியவந்துள்ளது..
உலகளாவிய பட்டினி குறியீட்டில் கடந்த 2023ல் 111 வது இடத்தில் இருந்த இந்தியா 2024 இல் 15 ஆவது இடத்தில் உள்ளதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது, மேலும் இந்த பட்டினி குறியடானது ஊட்டச்சத்து குறைபாடு குழந்தையின் இறப்பு விகிதம் குழந்தையின் வளர்ச்சி குறைதல் உள்ளிட்டவற்றை வைத்து கணக்கிடப்படுகிறது குழந்தை தனது வயது மற்றும் உயரத்தை விட எடை குறைவாக இருப்பது போன்ற விஷயங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், மேலும் உலகில் 36 நாடுகளில் மட்டுமே உள்ள கவலை பிரிவில் இந்தியாவும் ஒரு நாடாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த 20 ஆண்டுகளில் பட்டினி குறியீட்டில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் இந்தியாவில் இன்னும் பட்டினி குறையவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,ஒவ்வொரு நாளும் பட்டினியால் தவிக்கும் 73 கோடி மக்கள் நடப்பு ஆண்டு சர்வதேச பட்டினி குறியீட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இதில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது உலகில் ஒவ்வொரு நாளும் சுமார் 73 கோடி பேருக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் பட்டினியை எதிர்கொள்வதாகவும் சுமார் 250 கோடி மக்களால் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சில ஆப்பிரிக்கா நாடுகளில் பட்டினி குறியீடு அபாயகரமான அளவை தாண்டி சென்று விட்டதாக கூறப்பட்டுள்ளது..!!