பட்ட பகலில் ரவுடியை வெட்டி கொலை முயற்சி..!! பண்ருட்டியில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எம் புதுப்பாளையத்தில் புதுச்சேரியை சார்ந்த ரவுடி ஜெயபிரகாசை ஓட ஓட வெட்டிக்கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியை சார்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் மாறுமணி ஆகியோருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாறுமணி கோஷ்டியை சார்ந்தவர்கள் ஜெயப்பிரகாஷை பின்தொடர்ந்து வந்து பண்ருட்டியில் வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ரவுடி ஜெயபிரகாஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை..!!

Read Next

குடிநீர் தொட்டியில் இருந்தது மனித மலம் அல்ல தேன்கூடு..!! ஆய்வின் முடிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular