
Oplus_131072
ஆன்மீக குறிப்புகளின் படி பணப்பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வீட்டில் நல்ல காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இருப்பது மிகவும் நல்லது. ஆகையால் கதவு சற்று மூடி இருப்பது போல் ஜன்னல்கள் திறந்த நிலையில் இருப்பது போல் வைக்க வேண்டும். பணப்பெட்டியை வடக்கு திசையில் வைக்கலாம் அல்லது தென்மேற்கு திசையில் வடக்கு திசை பார்த்தும் அல்லது கிழக்கு திசை பார்த்தும் வைக்கலாம். பணப்பெட்டியை வைக்கக்கூடாத திசை என்றால் தென்கிழக்கில் வைத்தால் அதிக செலவு வரும். வடகிழக்கில் வைத்தால் லாபம் வராது. வடமேற்கில் வைத்தால் காற்றில் இட்ட கற்பூரம் போல் பணம் கரைந்து காணாமல் போகும். பணப்பெட்டியை பீரோவில் வைக்கலாம். அதை தவிர்த்து கீழே வைப்பது சரியானது அல்ல. சற்று உயரமாக இருக்க வேண்டும். ஒரு மரம் நாற்காலி அல்லது டேபிளில் மேல் வைக்கலாம்.