
பணம் மகிழ்ச்சியைத் தராது என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
நேற்று மாலை நான் மிகவும் பசியுடன் இருந்தேன் அதனால் உடனடியாக என் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு பானி பூரி கடைக்கு விரைந்து சென்று அங்கு 1 தட்டு பானி பூரி வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்.
பானி பூரி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அடிக்கடி அந்த கடை பையனை தொந்தரவு செய்தேன்.
(*)தம்பி கொஞ்சம் வெங்காயம் போடு
(*)தம்பி குடிக்க தண்ணி குடு
(*)தம்பி இன்னும் கொஞ்சம் மசாலா போடு
முகத்தில் எந்த விதமான சலிப்போ கோவமோ காட்டாமல் நான் கேட்பதையெல்லாம் பொறுமையுடன் எடுத்து கொடுத்தான் அந்த பையன்.
மொத்தம் 3 தட்டு பானி பூரி சாப்பிட்ட பிறகு, என் பசியும் அடங்கியது வயிறும் நிரப்பியது.
கடைசியாக சாப்பிட்டு முடித்து பணம் செலுத்தும் போது அந்த பையனுக்கு 10 ரூபாய் டிப்ஸ்(அன்பளிப்பு) கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
“தம்பி இந்தா 40 ரூபாய் இருக்கு.30 ரூபாய் நான் சாப்பிட்ட 3 தட்டுக்கு அப்புறம் 10 ரூபாய் நீ டிப்ஸா வைச்சுக்கோ பா “என்று நான் கூற
ஆரம்பத்தில் அதை மறுத்தாலும் பின் என்னுடைய வற்புறுத்தலின் பேரில் அந்த காசை சட்டைப்பையில் சந்தோசமாக போட்டு கொண்டான்.
3 தட்டு பானி பூரி சாப்பிட்ட சந்தோசத்தை விட அந்த பையனுக்கு கொடுத்த அன்பளிப்பு அதனால் அவனுக்கு ஏற்பட்ட முகமலர்ச்சி எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது.
பணம் மகிழ்ச்சியைத் தராது என்று யார் சொன்னது?
வாழ்க்கையில் பணம் எப்போதும் மகிழ்ச்சியை தரும் அதை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது.(முக்கியமாக இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் தரும் போது )