• September 29, 2023

பணம் நகை கொடுத்த போதிலும் கார் வேண்டும் என்று கொடுமைப்படுத்திய கணவன்..!மனைவி தற்கொலை..!பரபரப்பு சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா நெல்லூரில் இருக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவ படிப்பு படித்து வந்து உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு சைதன்யாவிற்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு சைதன்யாவை அவரது கணவர் குடும்பத்தினர் அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்து உள்ளனர். அவர்கள் கேட்ட பணம் நகையை கொடுத்த போதிலும் கார் வேண்டும் என மேலும் துன்புறுத்த தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தனது தாய் ஜோதிகுமாரிக்கு போன் செய்த சைதன்யா கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி குமாரி மகளின் தோழிகளுக்கு தகவலை தெரிவிக்க அவர்கள் விரைந்து சென்று ரூம் கதவை தட்டி பார்த்து உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாத காரணத்தினால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சைதன்யா தூக்கில் தொங்கியபடி இருந்து உள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சைதன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

மகளிர் உரிமைத்தொகை உறுதி..!வெளியான புதிய அப்டேட்..!!

Read Next

அரசு பேருந்து- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..!சம்பவ இடத்திலே வாலிபர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular