
பணம் நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவார்கள்?
அனுபவத்துல சொல்றேன்
கொஞ்சம் கூட நம்மள மனுசங்களா மதிக்கவே மாட்டாங்க.
அவங்க தேவைக்கு நம்மள பயன் படுத்திக்குவங்க.
அவங்க வீட்ல எந்த நல்லது கெட்டது நாலும் நமக்கு யாரோ சொல்லிதா தெரிய வரும்.
முக்கியமா நம்ம வீட்டுக்கு வரத கமி பண்ணிக்குவாங்க.
ரெண்டு வார்த்த அதையும் அளந்து அளவா பேசுவாங்க.
அறிவுரை அடை மழையா பொழிவாங்க.
பணமில்லாவிட்டால் ஒரு நாள் பொழுதை நீங்க கழிக்க முடியாது.
மளிகை பொருட்கள், குழந்தைகளின் படிப்பு, அன்றாடம் செலவு, போக்குவரத்து, டாக்டர் பில் முதற்கொண்டு எல்லாவற்றிக்கும் பணம் வேண்டும்.
பணம் இல்லை என்றால் உங்கள் தன்மானம் அழிந்து விடும். உங்கள் வாழ்க்கை துணை கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.
உயிரற்ற பணத்திற்கு இருக்கும் மதிப்பு கூட! உயிருள்ள மனிதனுக்கு இருப்பதில்லை!