பணிக்கு வரும் வழியில் சோகம்..!! காரை ஓட்டியபோதே மாரடைப்பால் பிரிந்த உயிர்..!! மறையும்போதும் மனிதநேயம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயக்ராஜ் மாவட்டம், ஹாண்டியா ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிந்து வரும் மருந்து பிரதிநிதி பிரமோத் யாதவ் (வயது 50). இவர் இன்று காலை மருத்துவமனைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டிலிருந்து புறப்பட்ட சில நிமிடத்திலேயே உடல் நிலையில் மாற்றத்தை எதிர்கொண்டவர் தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து காரை சாலையோரம் நிறுத்தி உள்ளார். பின் அப்படியே மாரடைப்பால் இறந்து உள்ளார். கார் ஓரமாக நின்றிருந்ததால் மக்கள் அதனை கண்டு கொள்ளாத நிலையில் நண்பகல் 12:00 மணி அளவில் கார் ஒரே இடத்தில் விற்பனை கண்டு சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிகழ்வடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் பிரமோத்தின் உடலை சோதனை செய்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.  உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஆசையாக சாப்பிட்ட மட்டன் எலும்பு தொண்டையிலேயே சிக்கியதால் சோகம்..!! அவதிப்பட்ட 66 வயது முதியவர்.!!

Read Next

ப்பா.. அழகில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..!! ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular