ஆடி மாதம் 22 ம் நாளான இன்று 12 ராசிக்கார்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு குடும்பத்தில் அன்பும் அக்கறையும் உண்டாகும். ரிஷப ராசிக்காரர்களே இன்று பிற்பகலுக்கு மேல் நன்மைகள் ஏற்படும் நல்ல நாளாக அமைய உள்ளது. மிதுன ராசியினருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கடக ராசிக்காரர்களே பிள்ளைகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் இன்றைய நாளில் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். சிம்ம ராசியினர் இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு உண்டாகும்.
துலாம் ராசியினருக்கு மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி, எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும். விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாளில் திடீர் செலவுகள் ஏற்பட்டு திணறவைக்கும். தனுஷ் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைத்த நாளாக அமையும். மகர ராசிக்காரர்களே இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் முடியும். கும்ப ராசிக்காரர்களே இன்றைய தினத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மீன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். மேலும் இது போன்ற நற்பலன்களை நாளை பொறுத்திருந்து காண்போம்.