![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/08/IMG_20240831_203833.jpg)
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் உணவு பொருட்களை மறுநாள் பதப்படுத்தி உண்பதனால் உடலில் ஆரோக்கியமற்ற பல நோய்கள் ஏற்படுகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் இறைச்சியினை பதப்படுத்தி சாப்பிடும் பொழுது நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 20 நாடுகளில் 19.7 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வருகிறதாக தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளனர், மேலும் சிவப்பு இறைச்சிகள் காணப்படும் ஹீம் இரும்புச்சத்து பெருங்குடல் கணையம் மற்றும் நுரையீரலில் புற்றுநோயில் உண்டு பண்ணும் தன்மை கொண்டுள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது, இதனால் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நடத்திய ஆய்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சிகப்பு இறைச்சியை சாப்பிடுபவர்கள் அதன் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுபவர்கள் அறவே அதனை பயன்படுத்தக்கூடாது என்றும் அப்ப பல்கலைக்கழகம் கூறியுள்ளது, மேலும் டைப்-2 நீரிழிவு நோய் மனிதனை அதிகம் தாக்குகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது..!!