பாலிவுட் திரைப்படம் நடிகையான திஷா பதானி முதன்முதலில் தெலுங்கில் உருவாகிய “ரோபர்” என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின்பு “எம் எஸ் தோனி” திரைப்படத்தில் நடித்து மக்களின் மனதில் பிரபலமடைந்தார்.
இதனை தொடர்ந்து அதிக அளவிலான பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் சிறுத்தை சிவா இயக்கும் “கங்குவா” திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அஸ்வினின் “கல்கி” திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஹிந்தியில் “வெல்கம் டு தி ஜங்கிள்” என்னும் திரைப்படத்திலும் நடித்திருக்கும் இவர் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகின்றார். அது மட்டும் அல்லாமல் இவர் “புஷ்பா 2” திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கனவே சமந்தாவின் “ ஊ சொல்றியா” பாடல் ரசிகர்களை கரங்கெடுத்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. எனவே அதே வாய்ப்பு தனக்கு தனக்கு கிடைக்கும் என்று திஷா பதானி திட்டம் போடுகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை திஷா பதானி. இவர் அடிக்கடி வெகு கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பார். அதே வகையில் தற்போது தனது உடையில் ஹாட் ஷேப் டிசைன் ஒன்றை வைத்து ஒரு போட்டோ சூட் நடத்தி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது கவர்ச்சியில் திணறி உள்ளனர்.