பத்தாண்டுக்கு பின் இந்தியாவிற்கு புதிய விடியல்..!! முதல்வர் மு க ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!!

பத்தாண்டுகளுக்கு பின் இந்தியாவிற்கு நல்லதோர் விடியல் கிடைக்கட்டும். பாசிச பாஜக வீழட்டும்..!! இந்தியா வெல்லட்டும்..!!” தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவேடு.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது வருகின்ற நான்காம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த முடிவுகளை எதிர்பார்த்து இரண்டு முறை ஆட்சி அமைத்த பாஜகவும், இரண்டு முறை ஆட்சியை தவறவிட்ட காங்கிரசும் காத்துக் கொண்டுள்ளனர். இந்த முறை மக்களின் பேராதரவுடன் ஆட்சியை அமைப்போம் என்ற வியூகத்துடன் காங்கிரஸ் கூட்டணி கட்சி களமிறங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் “பாஜகவின் பத்தாண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி இந்தியாவை காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து வெற்றியின் முகட்டில் நின்று கொண்டுள்ளது.

தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்ற மமதையில் இருந்த பாஜகவுக்கு எதிராக ஜனநாயக சக்திகளில் மாபெரும் அணி திரளாக அது அமைந்துள்ளது. இந்திய மக்கள் அனைவரும் நம்பிக்கை தரும் அணியாக தேர்தல் களத்தில் அமைந்துள்ளது. தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணி தலைவர்கள் பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மனதில் இருந்து உடைத்தெறிந்து  உள்ளார்கள். இந்திய கூட்டணியின் வெற்றி செய்திக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது அதிக விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஜூன் நான்காம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையப்போகிறது. இது தொடர்பாக இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் கழக பொருளாளரும் நாடாளுமன்ற கழக குழு தலைவர் ஆன டி ஆர் பாலு பங்கே இருக்கிறார், பாஜக வீழட்டும்..!! இந்தியா வெல்லட்டும்..!!”, என அதில் குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/mkstalin/status/1796787193689866597?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1796787193689866597%7Ctwgr%5Eabfa2191fa5a67d9fffba8ef953b5863a4915920%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Ftamilnadu%2Fdmk-president-tn-cm-mk-stalin-1-june-2024-tweet

Read Previous

மாணவ மாணவிகளுக்கு புதிய வங்கி கணக்கு தொடக்கம்..!! தமிழக பள்ளி கல்வித்துறை..!!

Read Next

தமிழகத்தில் வெப்பம் குறைந்தாலும் சென்னையில் அதே வெப்பம் நீடிக்கும்..!! வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular