பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது ஆவணி மாத கடைசி முகூர்த்த தினமாக செப்டம்பர் 16 திங்கட்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது..
தற்சமயம் தமிழக முழுவதும் நிலம் வாங்க விற்பதற்கான தொழில்கள் மிகவும் சிறப்பாக நடந்து வருகின்ற நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டில் வருவாய்க்கு அதிகமான பத்திரப்பதிவுகள் நடந்தது என்ன பத்திர பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது, ஆவணி மாத கடைசி முகூர்த்த தினமான செப்டம்பர் 16 திங்கட்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும் இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலர்களுக்கு 200 டோக்கனுக்கு பதில் 300 டோக்கன் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது, இதனால் முகூர்த்த தேதியில் பத்திர பதியம் செய்து கொள்ள நினைப்பவர்கள் சிரமமின்றி பத்திரம் பதிவு செய்து கொள்வார் மேலும் சார் பதிவாளர்களுக்கும் அன்றைய தினத்திற்கு ஏற்ற போல் ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது..!!




