பத்திரப்பதிவு என்பது நிலத்தின் உரிமை தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை அரசு பராமரிக்கும் பதிவேட்டில் பதிவு செய்வதாகும். மேலும் பத்திரப்பதிவு துறையில் போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதை தடுக்கவும், அரசுக்கு உரிய வருமானம் கிடைக்கவும் தமிழக அரசு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி பத்திர பதிவில் புதிய நடைமுறையை கொண்டு வந்தது. அதாவது கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி இடம் என்று பல பேர் பத்திர பதிவு செய்வதால் அரசுக்கு கிடைக்க கூடிய வருமானம் பாதிக்கிறது. இதனால் பத்திரப்பதிவு செய்யும் போது காலி மனை இடங்களை புகைப்படம் எடுத்து ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, தமிழக பத்திர பதிவுத்துறை இன்று(06.01.2025) வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த ஒன்பது மாதங்களில் 25 லட்சம் பேர் பத்திர பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த பத்திர பதிவு மூலம் தமிழக அரசுக்கு ரூ. 15,582 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது”.




