ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட இருக்கிறது என்றால் பத்து நாட்களுக்கு முன்பே அவர்களுக்கு அதற்கான அறிகுறி தென்படும்..
இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை மாரடைப்பு அவர்களை தாக்குகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் மாரடைப்பு ஏற்பட சரியான உணவு பழக்கமுறை இல்லாத காரணம் மற்றும் உடலுக்கு தேவையான உடற்பயிற்சி ஆரோக்கியமின்மை மற்றும் மன கவலை இவையெல்லாம் மாரடைப்புக்கு காரணமாகும், திடீரென மாரடைப்பு ஏற்பட இருக்கும் ஒருவருக்கு சில அறிகுறிகள் முன்னதாகவே தெரியும் சுவாச மாற்றங்கள் மற்றும் நெஞ்சுவலி, தோள்பட்டை, கழுத்து, கைவலி மற்றும் தாடை வழி ஏற்படுவது, சுற்றல் ஏற்படுவது தலை சுற்றலுடன் நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும், மாரடைப்பு ஏற்படதற்கு சில நாட்களுக்கு முன்பே சோர்வு ஏற்படுவது புதிதாக இருக்கும், இதய படபடப்பு மற்றும் அதிக வியர்வை தன்மை, செரிமான தன்மையை இவை மாரடைப்புக்கு முன்னதாகவே தெரியும், இவற்றை அறிந்தால் உடனே மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை முடிகளை மேற்கொள்வதனால் மாரடைப்பிலிருந்து தள்ளிருக்கலாம்..!!