சமீப காலமாக பாலியல் பலாத்காரம் என்பது நம் நாட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றமாகும். இந்நிலையில், குஜராத்தில் 30 வயதுடைய இளைஞன் 10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பனோலி என்ற கிராமத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 30 வயது உடைய தீபக் குமார் லால்பாபு சிங் என்ற இளைஞன் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு குஷால் ஓசா கூறினார்.
மேலும், தீபக் குமார் இந்த குழந்தையின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குழந்தையிடம் விளையாடுவதாகவும், அந்த குடும்பத்திற்கு நன்கு அறிந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் தாயார் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 22ஆம் தேதி அன்று வந்த தீபக்குமார் குழந்தையின் வீட்டிற்கு சாதாரணமாக வந்து குழந்தை இடம் விளையாடு போது போல் விளையாடி குழந்தையை வீட்டிற்கு சற்று தொலைவில் எடுத்துக்கொண்டு போய் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தை கேட்ட அவரது பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் போய் அங்கு பார்க்கும் பொழுது குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவது மற்றும் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்பதை பார்த்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் குடும்பம் மற்றும் அங்கிருந்த பகுதி மக்கள் தீபக் குமாரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த அதிர்ச்சியான செய்தியை கேட்டு பதறிப்பை வந்த குழந்தையின் தாய் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு பலத்த காயம் அடைந்து இருப்பதாகவும் இதிலிருந்து மீண்டு வர நாட்கள் ஆகும் எனவும் கூறியுள்ளனர். மேலும் போலீசார் தீபக் குமாரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




