பனங்கிழங்கு.. பொங்கலுக்கு அதிகமான அளவில் அறுவடை செய்யப்படும் பனங்கிழங்கு பற்றிய பதிவு..!!

#பனங்கிழங்கு காலம் இது… பொங்கலுக்கு எப்போதுமே அதிகமான அளவில் பனங்கிழங்கு அறுவடை நடைபெறும்…#தென்மாவட்ட ங்களில் அதிக மழையால் வரத்து குறைந்து விற்பனையாகிறது…

நல்ல உருண்டு திரண்ட நீளமான பனங்கிழங்கு விளைச்சல் காலம் மூன்று மாதமாகும்… பனங்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயி பனைமர உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றார்… அவர்களிடம் இருந்து பனைசார்ந்த அறிவை நாம் நிறைய வளர்த்து கொள்ள வேண்டும்..

பொங்கலில் பனைசார்ந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.. இடையிலே வந்த கரும்பாலும்,கள்தடையாலும் பனையேறிகளும், பனைசார்ந்த பொருட்களும் ஓரம் கட்டப்பட்டுள்ளன… பனங்கிழங்கின் பயன்கள் ஏராளம்… இது எங்கு கிடைத்தாலும்,எவ்வளவு கிடைத்தாலும் வாங்கி கொள்ளுங்கள்.. உப்பு மஞ்சள் சேர்த்து அவித்து உண்ணலாம்..

இதற்கு இணையான ஊட்டசத்து உணவு உலகில் வேறு எங்குமே இல்லை… பனங்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி காய வைத்து(#ஒடியல்) மாவாக திரித்து விதவிதமாக ஆண்டு முழுவதும் உண்டு மகிழலாம்…

நொங்கை தவிர்த்து பனம்பழமாக காத்திருந்து பனங்கிழங்கை உண்டு மகிழலாம்… பனை நமக்கு தந்த கொடை அது .. எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பனையை பயன்படுத்துகின்றீர்களோ அந்த அளவு பனை உங்களுக்கு ரெட்டிப்பான நன்மைகளை தரவல்லது… பனையை பயன்படுத்துவோம் வாழ்வில் வளம்பெறுவோம்..

#பனைமரத்திரலிருந்துகிடைக்கும்

அனைத்து #பனைஉணவு பொருட்களும்

மிகவும் சத்து நிறைந்தவை . . .#பனங்கிழங்கு

#நுங்கு #பதநீர் விற்பனை செய்யும் நபரிடம் பேரம் பேசி வாங்காதீர்கள் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே இதை விற்பனை செய்கிறார்கள்.

Read Previous

ஒரு கப் பச்சை பயிறு வச்சி ஒரு முறை இப்படி குழம்பு செய்யுங்க ருசி வேற லெவல்ல இருக்கும்..!!

Read Next

இலவச சமையல் சிலிண்டர்: விண்ணப்பிப்பது எப்படி?.. முழு விவரங்களுடன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular