
பன்றி காய்ச்சல் நோய் ஸ்வைன் ப்ளூ என்பது ஏன் இன்ப்ளூயென்ஸா வகை வைரஸ் கிருமிகளால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் மனிதனுக்கு இந்த நோய் பொதுவாக வராது என்றாலும் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்..
ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களை தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்த நோய் தாக்கக்கூடும், இந்த அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகவும் அவரின் பரிந்துரைப்படி மருத்துவமுறையை பின்பற்றுதல் வேண்டும், பன்றி காய்ச்சல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் உள்ளது மேலும் பன்றிக் காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள், பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பன்றி காய்ச்சல் பரவுவது தடுக்க தும்பிய பிறகும் விரும்பிய பிறகும் நமது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் வெளியில் சென்று விட்டு வந்ததும் கை கால்களை நன்கு கழுவி பின்னர் முகத்தை கழுவ வேண்டும் நன்கு ஓய்வெடுக்க வேண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் பானங்கள் நிறைய பருக வேண்டும் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும் இந்த நோய் வந்தால் நோயற்றவரை தனிமைப்படுத்துவது அவசியமாகிறது..!!