பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் முன்னாள் அண்ணா பல்கலை., கௌரவ பேராசிரியர்..!! அதிரவைக்கும் சம்பவம்.!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டை ஜானி ஜகான்ஸ் கான் தெருவில் . செயல்படும் மாடல் எஜுகேஷன் அறக்கட்டளை நடத்தி வருபவர் ஹமீது உசேன். இவர் அண்ணா பல்கலைன் முன்னாள் கௌரவ பேராசிரியர் ஆவார்.

இதனிடைய அகமது தன்னிடம் பயின்று வரும் மாணவர்களுக்கு பயங்கரவாத சித்தாந்தங்களை போதனை செய்வது, அவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பது, அதற்கான ரகசிய கூட்டம் நடத்தி வந்ததாக புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து ரகசிய கண்காணிப்பு நடத்திய அதிகாரிகள் தாம்பரம் மற்றும் ராயப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். பல டிஜிட்டல் ஆவணத்தை கைப்பற்றினர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். அகமது உசேன் அவரின் தந்தை அகமது மன்சூர் சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரிடம் நடந்த விசாரணையில் இவர்களுக்கு ஹிஸ்புத் உத் தஹ்ரிர் (எச்யுடி)  எனப்படும் சர்வதேச கும்பலோடு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த அமைப்பின் உறுப்பினர்களாகவும் இவர்கள் செயல் பட்டு வருகின்றனர்.

youtube சேனல் நடத்தி இந்திய தேர்தலுக்கு எதிரான சித்தாந்தங்களை பேசி வந்த அகமது உசேன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மூன்று பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் பேரில் சென்னையில் வசித்து வந்த முகமது, நவாப் ஷரீஃப் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைன் கௌரவ பேராசிரியராக  வேலை பார்த்து வந்த காரணத்தால் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்திற்கு உட்படுத்தி இருக்கிறாரா..? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read Previous

இந்த குட்டி குழந்தை முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த பிரபல நடிகை தெரியுமா.?

Read Next

“இது என் ஊரு., உயிரோட இருக்கமாட்டிங்க” – இரயில் பயணியிடம் போதையில் தகராறு செய்த இளைஞர்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular