
பயங்கர சாலை விபத்து..!! கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் பலி..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இ-ரிக்ஷா மீது கார் மோதியது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்ப்பிணி பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரசவத்திற்கு இன்னும் அவகாசம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து இ-ரிக்ஷாவில் வீடு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் கர்ப்பிணி குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர்.