பயனுள்ள வாழ்க்கையை வாழ கல்வியை தேடுங்கள் கல்வி அவசியம் உங்களுக்கு..!!!

கல்வி கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகிறான் இது ராமகிருஷ்ண பரமாச்சாரின் வேதவாக்க..

இளமையில் கல் என்பது ஔவை மூதாட்டியின் அருள் வாக்கு கல் மேல் எழுத்து என்கிறார்கள். கல்லின் மீது வடிக்கப்பட்ட எழுத்து எக்காலத்திலும் அழிந்து போவது இல்லை என்பதாலேயே அப்படி சொல்லப்பட்டது. மனிதன் கல்வி கற்றதின் பயனாக ஆய்ந்து அறிவும் தன்மையைப் பெற்றான். நன்மை தீமை என்பவற்றை புரிந்து கொண்டான் சிந்திக்கவும் தலைப்பட்டான்..

மரியாதை ஒழுக்கம் பணிவு தன்னடக்கம் என சொல்லப்படும் நற்குணங்களை ஒருங்கே கற்றுக் கொடுப்பது கல்வி. ஒருவன் காலம் முழுவதும் கல்வி கற்றுக் கொண்டே இருக்கலாம் ஒருவனுக்கு கிடைக்கப்பெற்ற அழகெல்லாம் அழகல்ல அவன் மனதில் யாதொரு குற்றமும் இல்லாமல் தோன்றக்கூடிய கல்வியின் அழகே அழகு என்று நாலடியார் கூறுகிறது..

நபிகள் நாயகம் கல்வியின் சிறப்பை இவ்வாறு நவில்கின்றது. கல்வியை தேடுங்கள் ஏனெனில் இறைவனின் நல் அருளோடு அதை தேடுபவன் தூய செயல் செய்பவன் அவன் கல்வியை பற்றி பேசு இறைவனைப் புகழ்ந்தவனாவன்..

இப்படி நானிகளும் மகான்களும் அறிவியல் மேதைகளும் மனிதன் ஒவ்வொருவனும் கல்வியை கற்க வேண்டும் என்று அறிவுறுத்தி கூறியுள்ளனர். அந்த காலத்தில் அரசர்கள் கல்வியை அறிந்து சிறந்து விளங்கியதோடு அல்லாமல் புலமை தத்துவம் பெற்றவர்களாகவும் விளங்கினர். நாட்டுப்பற்று தேசப்பற்று என்று நாட்டிற்காக தன் உயிரையும் தியாகம் செய்கின்றனர் அதன் காரணமாகவே பசுவின் கன்றை கொன்றவன் தன் மகன் எனத் தெரிந்த பின்னரும் மகனை தேர் காலில் வைத்துக்கொண்டு உயிருக்கு உயிர் என நீதி வழங்கின மனுநீதி சோழன்..

மழையில் குளிரால் நடுங்கி கொண்டிருந்த மயிலுக்கு போர்வை தந்தான் மன்னன் பேகன். தொற்றி படர கொழுக்கொம்பில்லாத சுற்றிக்கிடந்த கொடிக்கு தன் தேறையே தந்தான் பாரிவள்ளல். இவர்கள் எல்லாம் கல்வியின் மேன்மையை தெரிந்த காரணத்தினாலேயே பறவைகளும் தாவரத்திற்கும் பரிவு காட்டும் பண்பு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு உயர்ந்த மனம் படைத்தவர்களாக இருந்துள்ளார் என்பதை உணர்த்துகிறது..

கல்வி கற்க வேண்டிய காலத்தில் முறையாக கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்வது இன்றைய மாணவர்களின் மையாகும் கல்வியால் திறந்த ஒரு நாடு நாடாகும். கல்வி இல்லாத நாடும் வீடும் பெருங்காடாகும்..!!

Read Previous

பாகற்காய் உடன் சேர்த்து உண்ணக்கூடாத உணவுகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் பயனுள்ளதாக அமையும்..!!

Read Next

அதிகம் புரதம் கொண்ட உணவாக தவறாக கருதப்படும் 10 உணவுகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular