பரபரப்பு.. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கூட்டுறவு செயலர்..!! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. அப்பொழுது அவருக்கு வயது 17 ஆகும்.

அதனை தொடர்ந்து கடும் வயிற்று வலியால் பாதிப்படைந்த அந்த சிறுமியை பெற்றோர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி எட்டு மாத கால கர்ப்பமாக இருப்பதாக கூறினார் .இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி காவேரிபட்டினம் அடுத்துள்ள குண்டலப்பட்டி கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வருகின்ற சப்பரத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலாளராய் பணிபுரிந்து வரும் உதயண்ணன் உட்பட 3 பேரின் பெயர்களை கூறியுள்ளார்.

பின் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர் குற்றவாளிகள் மூவாரையும் கைது செய்து வழக்கு  நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆஜரான நீதிபதி சுதா குற்றம் சாட்டப்பட்டவர்களின் உதயண்ணன் என்பவரது டிஎன்ஏ குழந்தையின் டிஎன்ஏ உடன் ஒத்துப் போகிறது எனவே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய உதயண்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு நண்பர்கள் மீது சாட்சியங்கள் நிரூபணம் ஆகாததால் அவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Read Previous

எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! 52 வயது கணித ஆசிரியர் கைது.!!

Read Next

நடிகர் பகத் பாசில் நடிக்கும் படத்தின் தலைப்பு, ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular