
பீகார் மாநிலத்தில் அரசு அதிகாரியின் கார் மாணவிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாய் பரவி வருகிறது.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மண்ஹர் என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அதை செய்து தரக்கூடிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது மாணவிகளை அடக்க முயன்ற காவல்துறை அதிகாரி பள்ளி மாணவிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் காவல்துறை அதிகாரியின் கார் என நினைத்து கல்வித்துறை அதிகாரியின் மகேந்திரா ஸ்கார்பியாக அடித்து நொறுக்கினார். பள்ளி சீருடையில் மாணவிகள் காரை அடித்து நொறுக்கும் காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்த போராடும் மாணவிகளை தாக்குவது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
VIDEO | Girl students of a government school in Mahnar of Bihar's Vaishali district vandalise the vehicle of Education Department officer while protesting against lack of facilities in the school. pic.twitter.com/GOlU7GBnry
— Press Trust of India (@PTI_News) September 12, 2023