பரமத்திவேலூர் அருகே பழைய தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட திமுக புதிய கட்சியா அலுவலகத்தை சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார்..
தமிழகத்தில் கலைஞர்கள் நினைவாக அரங்கங்கள் அறிவாலயங்கள் ஆங்காங்கே கட்டப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வருகிறது, அதனை தொடர்ந்து பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி வேலூரில் பழைய தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட திமுக புதிய கட்சி அலுவலகத்தை சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார் மேலும் அவருடன் வனத்துறை அமைச்சர் மதிவேந்தர் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உட்பட பலரும் கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பித்துள்ளனர், மேலும் இந்த திமுக அலுவலகத்தில் கலைஞரின் பெருமை போற்றும் விதமாக சிறப்பம்சங்கள் பலவும் இடம்பெற்றுள்ளது மேலும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணிந்துறை வழங்கி விழாவை சிறப்பித்துள்ளார்..!!




