சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்பொழுது இந்தியாவில் புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ADS கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதித்து இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஜிகா வைரஸ் கர்ப்பிணியை பாதித்தால், வயிற்றில் இருக்கும் சிசுவும் பாதிக்கப்படும். இதன் காரணமாக மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.