
தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “5 வயதிற்கு குறைவான குழந்தைகள், கட்டுப்பாடற்ற நோய் இருக்கும் நோயாளிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவும், முதியவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் பொழுது முகக்கவசம் அணிதல் அவசியம்” என்றும் கூறியுள்ளது. மேலும் முடிந்தவரை அனைவரும் சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணும் படி தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.