பராசக்தி படத்தில் இருந்து சிவாஜியை நீக்க சொன்ன ஏவிஎம் மெய்யப்ப செட்டியார்.. ஏன் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வேக வேகமாக வளர்ந்துள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளராக பெருமாள் இருந்தாலும், படத்துக்கு பைனான்ஸ் செய்தது ஏவிஎம் நிறுவனம்தான். கிட்டத்தட்ட பாதி முடிந்த படத்தை ஏவிஎம் செட்டியாருக்கு போட்டுக் காட்டியுள்ளார் பெருமாள். எடுக்கபட்ட காட்சிகளில் சிவாஜி கணேசன் சிறப்பாக நடித்திருந்தாலும் அவர் மிகவும் ஒல்லியாக இருந்ததால் கதாபாத்திரத்துக்கு பொருந்தவில்லை எனக் கூறியுள்ளார் செட்டியார்.

அதனால் அவருக்கு பதிலாக எம் கே ராதாவை வைத்து படத்தை மீண்டும் எடுக்கலாம் என சொல்லியுள்ளார். ஆனால் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவும், தயாரிப்பாளர் பெருமாள் முதலியாரும் சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்கள்.

அதனால் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் மூன்று மாதம் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சிவாஜி கணேசனுக்கு நல்ல உணவை வாங்கிக் கொடுத்து அவரை கொஞ்சம் தசைபிடிப்புள்ள ஆளாக மாற்றுங்கள். அதன் பிறகு ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம்.  அதன் பிறகு முன்று மாதம் கழித்துதான் பராசக்தி படத்தை மீண்டும் எடுத்து வெளியிட்டார்களாம். அதில் சிவாஜியின் தோற்றம் எதிர்பார்த்தது போல வந்திருக்கிறது.  படமும் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது.

Read Previous

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – Engineering பட்டதாரிகளுக்கு ரூ.2,80,000/- சம்பளம்..!!

Read Next

நள்ளிரவில் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!! படுகாயமடைந்த போலீசார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular