பருப்புப் பொடி ரெசிபி இப்படி செய்து பாருங்க..!! முழு செய்முறை உள்ளே..!!

பருப்புப் பொடி ரெசிபி

 

தேவையானப் பொருட்கள்:

 

துவரம்பருப்பு – 200 கிராம்

உளுத்தம்பருப்பு – 100 கிராம்

பொட்டுக் கடலை – 100 கிராம்

கடலைப்பருப்பு – 50 கிராம்

காய்ந்த கருவேப்பிலை – 1 கையளவு

மிளகாய் வற்றல் – 20 – 30 எண்ணங்கள்

பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்

பூண்டு கோல்டன் பிரவுனில் எண்ணெயில் வறுத்தது – 10 பல்

உப்பு தேவையான அளவு

 

செய்முறை :

 

1. மேலேச் சொன்ன அனைத்துப் பருப்புகளையும் தனித் தனியாக கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

 

2. மிளகாய் வற்றல் தனியாக வறுக்கவும்.

 

3. இப்போது காய்ந்த கருவேப்பிலை லைட்டாக வறுத்து அதிலேயே உப்பு மற்றும் பெருங்காயத்தூள் இட்டு வறுத்து அடுப்பை ஆஃப் செய்து விடவும்.

 

4. வறுத்த அனைத்தையும் ஆர விடவும்.

 

5. அனைத்தும் ஆறியவுடன் துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை கொஞ்சம் கொர கொரப்பாக மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

6. உளுத்தம்பருப்பு தனியாக நைசாக அரைத்துக் கொள்ளவும்.

 

7. இப்போது பொட்டுக் கடலையுடன் மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் காய்ந்த கருவேப்பிலை உப்பு மற்றும் வறுத்த பூண்டு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

 

8. அரைத்த எல்லாப் பொருட்களையும் ஒன்றுச் சேர்த்து கலந்து ஆர விடவும்

 

9. இப்போது தாராஸ் கிச்சன் ஸ்டைலில் பருப்புப் பொடி ரெடியாகவிடும்.

 

10. சுடச்சுட சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு உங்களுக்குத் தேவையான அளவு பருப்புப் பொடி இட்டுச் சாப்பிட்டோம் என்றால் எப்படி இருக்கும் தெரியுமா. மிகவும் சுவையாக இருக்கும் நண்பர்களே…

 

Read Previous

திமுகவின் கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக..!!

Read Next

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன..?? அக்னி நட்சத்திர வரலாறு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular