
தின்பண்டம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். அதிலும் வடை வகைகள் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். உளுந்த வடை பருப்பு வடை போன்றவை அனைத்து முக்கிய நிகழ்விலும் இருக்கும் தின்பண்டங்கள் ஆகும். அப்படி பச்சை பட்டாணி வடை செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை:
காய்ந்த பச்சை பட்டாணி – 300 கிராம்,
கடலை பருப்பு – 100 கிராம்,
அரிசி – 2 கரண்டி,
பெரிய வெங்காயம் – 2,
பெருங்காயத்தூள் – 2 சிறிய கரண்டி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
இஞ்சி துண்டு, சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் இஞ்சி வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடிப்பொடியாக வெட்ட வேண்டும். அடுத்து காய்ந்த பச்சை பட்டாணி கடலை பருப்பு அரிசி ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதில் இரண்டு மணி நேரம் கழித்து உப்பு பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இந்த மாவில் வெங்காயம் இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். அடுத்து கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி இந்த மாவை தட்டி அதில் போடவும். பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி வடை தயார்.