பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்துவரும் நாடுகளுக்கு அதிக அளவிலான பணம் தேவை நைஜீரியா அறிவிப்பு..!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாகவே வெள்ளப்பெருக்கு மற்றும் பாலைவனமாதல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வுகளை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்து வரும் நாடுகள் அதிக அளவு பணம் தேவைப்படுவதாக  நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நைஜீரியா மத்திய நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் தெரிவிக்கையில் “பருவநிலை மாற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உலகிற்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை படுகின்றது என்றும், பருவநிலை மாறுபாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது”, என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பருவநிலை மாறுபாட்டை எதிர்த்து போரிட அதிக அளவில் நிதி திரட்ட வேண்டும் என்றும் அதற்கு மாறாக பருவநிலை மாறுபாடு குறித்து மட்டும் பேசுவது பயன்தராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் உபயோகத்தை குறைத்து பசுமை சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு நாம் வாழவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

ரேக்ளா வண்டியில் மணமக்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற உறவினர்கள்..!! வைரலாகும் வீடியோ..!!

Read Next

பாஜக நிர்வாகிகளின் அடுத்தடுத்த சந்திப்பு..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular