பருவமழை காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இரும்பல், வருவது இயல்பு அப்படி இருக்கையில் நாம் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
தொடர்ந்து பெய்துவரும் பருவமழையின் காரணமாக குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் ஏற்படுவது வழக்கம் தான், ஒருவேளை வழக்கத்திற்கு மாறாக காய்ச்சல் ஏற்ப்பட்டால் அதாவது 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் குறையாமல் அதிகரிக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து தகுந்த மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் இதனால் முடிந்தவரை காய்ச்சலை சரி செய்து மூளைக்காய்ச்சல் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம், மேலும் தொடர்ந்து இருமல் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் அது மூளை காய்ச்சலுக்கான அறிகுறி ஆகும்..!!